கோவைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
தர்பூசணி போன்ற தோற்றத்தைக் கொண்ட கோவைக்காய் வேகமாக வளரக்கூடியது.
சர்க்கரை நோய்க்கு நல்லது
ஆயுர்வேத மருத்துவத்தில் கோவைக்காய் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதுவும் கோவைக்காயை மட்டுமின்றி அதன் தண்டுகள், இலைகள் போன்றவற்றையும் சமைத்தோ, சூப்பில் சேர்த்தோ சாப்பிடலாம்.
அதுவும் கோவைக்காயின் இலைகளை பச்சையாக தொடர்ந்து சில வாரங்கள் உட்கொண்டு வந்தால் உயர் இரத்த சர்க்கரை அளவு சட்டென்று கட்டுப்பாட்டில் வருவதாக தெரிவிக்கின்றன.
உடல் பருமன் தடுக்கப்படும்
கோவைக்காயில் உடல் பருமனை தடுக்கும் பண்புகள் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அதுவும் இதில் உள்ள பண்புகளானது முன்-அடிபோசைட்டுகளை கொழுப்பு செல்களாக மாற்றுவதைத் தடுக்கிறது.
கோவைக்காயானது உடலின் மெட்டபாலிச விகிதத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
உடல் சோர்வு நீங்கும்
கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் கோவைக்காயை அடிக்கடி உட்கொண்டு வந்தால் அது இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்கும்.
உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும். கோவைக்காயை சாப்பிட்டால் உடல் ஆற்றலுடனும் ஃபிட்டாகவும் இருக்கும்.
நரம்பு மண்டல பிரச்சனைகள் சரியாகும்
தர்பூசணியைப் போன்றே கோவைக்காயில் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான பி2 உள்ளது.
இந்த வைட்டமின் உடலின் ஆற்றலைப் பராமரிக்கும் முக்கிய பணியை செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நரம்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது.
செரிமானம் மேம்படும்
கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்தானது செரிடிமான மண்டலத்தின் செயல்பாட்டை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஏற்கனவே செரிமான பிரச்சனைகள் இருந்தால் கோவைக்காயை அடிக்கடி சாப்பிடுங்கள்.
இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.