ரணிலின் பயணத்துக்கு நிதியை அங்கீகரித்த சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமையக சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (23) நடைபெற்ற விசேட காவல்துறை ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விசாரணைகள் தொடருந்தும் நடந்து வருவதால், சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டுவாரா என்பது குறித்து இன்னும் எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் தவறான வழியில் நடந்து கொண்டார் எனவும் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை சரியான திசையில் வழிநடத்த வேண்டும்.
அவர்கள் தமது சொந்த நோக்கங்களுக்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்த முடியாது எனவும் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பயணத்துக்கான செலவுகளுக்கு முன் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.