ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா?

Cancer Healthy Food Recipes Indigestion
By Sahana Jun 23, 2025 10:27 PM GMT
Report

உங்கள் காலை நேரத்தை உற்சாகமாகத் தொடங்க ஒரு எளிய வழியைத் தேடுகிறீர்களா? அப்படி என்றால் ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடி (முருங்கைக்கீரைப்பொடி) உங்கள் நாளை இயற்கையான ஆற்றல் நிறைந்ததாக மற்றும் அன்றைய நாளுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் கணிசமான அளவை நிரப்ப உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

குறிப்பாக ஆசியாவில் பல நூற்றாண்டுகளாக உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முருங்கை மரம் பெரும்பாலும் ஆரோக்கியத்திற்கு அதிசயம் செய்யும் மரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மரத்தின் இலைகள், காய்கள், பூக்கள் மற்றும் பட்டை என கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியும் உண்ணக்கூடியவை மற்றும் நம் உடலுக்கு நன்மை பயக்கும் விஷயங்களால் நிரம்பியுள்ளன.

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

கிட்டத்தட்ட ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் 90-க்கும் மேற்பட்ட பயோஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் உள்ளன. இவை இன்ஃப்ளமேஷன் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.

பொதுவாக முருங்கை ஒரு நியூட்ரியன்ட் பவர்ஹவுஸ் என குறிப்பிடப்படுகிறது. இது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது. 

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

ஆற்றலை அதிகரிக்கும்

உங்கள் ஆற்றலை இயற்கையான வழியில் அதிகரிக்க விரும்பினால் முருங்கைப்பொடி சிறந்த வழி. நீங்கள் வழக்கமாக பருகும் காஃபின் பானங்களுக்கு பதிலாக தண்ணீரில் ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியை கலந்து பருகினால் இயற்கையாக ஆற்றல் அதிகரிக்கும்.

இந்த பொடியில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து உடலில் ஆக்ஸிஜன் ட்ரான்ஸ்போர்ட் சிறப்பாக இருக்க பங்களித்து சோர்வைக் குறைக்கிறது. இதில் உள்ள அமினோ ஆசிட்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஸ்டாமினாவை அதிகரிக்கும், இது காலை நேரத்தை சிறப்பான உற்பத்தி திறன் மிக்கதாக ஆக்குகிறது.

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்

ஏற்கனவே குறிப்பிட்டது போல முருங்கை இலைகளில் 90-க்கும் மேற்பட்ட பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன, அவற்றில் சில ஃபிளாவனாய்ட்ஸ், பீனாலிக்ஸ், கரோட்டினாய்ட்ஸ் மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும்.

இவை நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை தடுக்கின்றன.

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

நோய் எதிர்ப்பு சக்தி

முருங்கையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. மேலும் இந்த தாவரத்தில் குளோரோஜெனிக் ஆசிட் மற்றும் குர்செடின் போன்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற சேர்மங்கள் கணிசமான அளவு உள்ளன.

பரவலாக காய்ச்சல் அதிகமாக இருக்கும் சீசனில் உங்கள் காலை உணவான ஸ்மூத்தி அல்லது ஓட்மீலில் முருங்கையை சேர்ப்பது நோய்களை தடுக்க உதவும்.

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

செரிமான ஆரோக்கியம்

செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க முருங்கைப்பொடி உதவுகிறது. இது நன்மை பயக்கும் குடல் நுண்ணுயிரிகளை ஆதரிக்கிறது, சீரற்று இருக்கும் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே முருங்கைப்பொடியை நீங்கள் ஒரு ஸ்பூன் தயிரில் அல்லது ஜூஸில் கலக்கலாம், இது உங்கள் செரிமான அமைப்பை அன்றைய தினத்திற்குத் சிறப்பாக வைக்கும்.

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

கல்லீரல் ஆரோக்கியம்

முருங்கையானது கல்லீரலுக்கு நல்லது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து (NAFLD) கல்லீரலைப் பாதுகாக்க இது உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், NAFLD பாதிப்பை குறைக்க முருங்கை உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. முருங்கையில் காணப்படும் சேர்மங்களில் ஒன்று கல்லீரல் உயிரணுக்களில் படியும் கொழுப்பைக் குறைத்து, கொழுப்பை உடைக்கும் புரதங்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.

ஒரு ஸ்பூன் முருங்கைப்பொடியில் இத்தனை நன்மைகளா? | So Many Benefits In Spoonful Of Drumstick Powder

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US