நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்; திணறும் அதிகாரிகள்
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது
பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளதுடன் காணாமல்போனோரை தேடி மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.