ஜலதோஷம் முதல் இதய நோய் வரை ...சின்ன வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா!
தற்போதைய காலகட்டத்தில் சின்ன வெங்காயத்தை பயன் படுத்துபவர்கள் மிகவும் குறைந்து விட்டனர். சீக்கிரம் வேலை முடிய வேண்டும் என்பதற்காக பெரிய வெங்காயத்தையே பலரும் பயன் படுத்தி வருகின்றனர்.
ஆனால் கிராம் புறங்களில் உள்லவர்கள் சின்ன வெங்காயமே அதிகம் பயபடுத்துகின்றனர். ஏனெனில் சின்ன வெங்காயம் பல நோய்களை உடலில் இருந்து விரட்டியடிக்கின்றது.

ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை
ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும்.
சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் ரத்த கொதிப்பு குறைவதோடு இதயமும் பலமாகும்.
இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும். அதேபோல் மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் ஒரு அருமருந்து.

பொடுகு தொல்லை, முடி கொட்டுதல், வழுக்கை
மேலும் பொடுகு தொல்லை, முடி கொட்டுதல், வழுக்கை போன்ற பிரச்சனைகளும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது. வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் முடி வளரவும் வாய்ப்பிருக்கிறது.
தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயம் சாறை தேய்த்தால் உடலில் விஷம் ஏறாது.
சின்ன வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தை சார்ந்து சாப்பிடும் பொழுது பித்தம் குறையும். தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய நெடியி சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும்.

இன்சுலின் சத்துக்கள்
அதேபோல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு, மூல பிரச்சினைகளும் நீங்கும்.
குறிப்பாக சின்ன வெங்காயத்தில் இன்சுலின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சின்ன வெங்காயத்தை தவறாமல் சாப்பிட வேண்டும்.
சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து உண்பதால் உடல் உள்ள கொழுப்புகள் கரையும். தொடர்ந்து 48 நாட்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடல் குளிர்ச்சியடையும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.