ஐரோப்பாவில் கடும் குளிர் காலநிலை ; இலங்கையர்கள் ஐவர் உட்பட பலர் பலி
ஐரோப்பா உட்பட பல நாடுகளில் கடுமையான குளிர் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களில் ஐந்து இலங்கையர்களும் அடங்குகின்றதாக கூறப்படுகின்றது.
பிரான்ஸ், இத்தாலி, ருமோனியா ஆகிய நாடுகளில் இந்த மரணங்கள் பதிவாகி உள்ளன. கடும் குளி காலநிலையால் ருமெனியாவில் மட்டும் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வீட்டற்ற இலங்கையர்கள்
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வீட்டற்ற நிலையில், பூங்காவில் வசித்து வந்த இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் இலங்கையர்கள் அல்லாத மேலும் ஐந்து பேர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை ருமேனியாவில் பணிக்காக சென்ற நிலையில், கடும் குளிரை தாக்க முடியாத நிலையில் மூன்று இலங்கையர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் பாகைக்கும் குறைவாகச் சென்றுள்ளதால், திறந்தவெளிகளிலும் தற்காலிக இடங்களிலும் தங்கியிருப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இவ்வாறான மரணங்கள் பதிவாவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு குளிரின் வீச்சு அதிகமாகக் காணப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில நாட்களாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளன.