போதைப்பொருளுடன் அரசியல்வாதி கைது
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதோடு கைது செய்யப்பட்டவர் கந்தகெட்டிய பிரதேச சபையில் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன் ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையயாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பின்போது விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதுடன், சந்தேக நபர் இன்று (17) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.