தன்னை அவமானப்படுத்தியதாக SJB பெண் உறுப்பினர் முறைப்பாடு
புத்தளம் மாவட்டம் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான எஸ்.ஜே.எம். ஜயரத்ன, தன்னை வாய்மொழியாக அவமானப்படுத்தியதாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான நிகினி அயோத்யா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சிலாபத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான நிகினி அயோத்யா,

இராஜினாமா
ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான எஸ்.ஜே.எம். ஜயரத்ன கடந்த நவம்பர் 12 ஆம் திகதி அலுவலகத்தில் வைத்து என்னை வாய்மொழியாக அவமானப்படுத்தினார்.
இதனால் நான் அரசியலில் இருந்து விலகி, கட்சித் தலைவரிடம் தனது இராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் சமரசத்திற்கு வர விரும்பவில்லை என ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.