NPP க்கு ஆதரவளித்த 5 கட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியது SJB
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையில், கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஐக்கிய மக்கள் சக்தி தனது ஐந்து உறுப்பினர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
நீக்கப்பட்டவர்களில் முன்னாள் குழுத் தலைவர் நிஹால் மெண்டிஸ் உட்பட ஐந்து உறுப்பினர்கள் அடங்குவதாக களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.

இந்த உறுப்பினர்கள் NPP-க்கு ஆதரவளிப்பதற்காக பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான ஆதாரங்கள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,
தமிழக அரசியலில் பரபரப்பு ; விஜய் ராஜினாமா செய்த தொகுதியில் ராகவா லோரன்ஸ்? நடிகர் வெளியிடவுள்ள அறிவிப்பு
வெற்றிடமான இடங்கள் சட்டப்படி அடுத்த தகுதியான வேட்பாளர்கள் நியமிக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.