பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட அறுவர்
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அறுவர் பிரதேச வாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முற்பட்டவர்களே பிரதேச மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்களால் பிடிக்கப்பட்ட 6 சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் யாழ்.சங்கானை பகுதியை சேர்ந்த ஐவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று (30) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.