ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள்; தாய் நலம்... சேய்கள் நலமில்லை
ராகமவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்ததை காஸில் ஸ்ட்ரீட் பெண்களுக்கான வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
400-700 கிராம் எடையில் குழந்தைகள்
ஐந்து குழந்தைகள் காசல் ஸ்ட்ரீட் வைத்தியசாலையிலும் மற்றைய குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழாய் மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த ஆறு குழந்தைகளும் 26 வாரங்களில் பிறந்துள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன.
அதோடு குழந்தைகள் 400-700 கிராம் எடையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உபகரணங்களோ, மருந்துகளோ இன்றி இவற்றைச் செய்ய முடிந்துள்ள போதும் , ஆறு குழந்தைகளின் உயிர்கள் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஒரே நேரத்தில் 6 குழந்தைகளை இப்படி உயிருடன் வைத்திருப்பது மருத்துவமனைக்கும், குடும்பத்துக்கும் பெரிய சவாலாகவும் சுமையாகவும் இருப்பதாக வைத்தியர் சமன் குமார குறிப்பிட்டார்.