அம்பாந்தோட்டையில் சினோவாக் தடுப்பூசி தொழிற்சாலை!
அம்பாந்தோட்டையில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளை தயாரிக்கும் தொழிற்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி சீனாவின் ஒரு மருந்து நிறுவனமொன்றினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் சீனாவும், இலங்கையும் தங்கள் இருதரப்பு "தடுப்பூசி இராஜதந்திரத்தை" விரிவுபடுத்தவுள்ளன.
இந்நிலையில் புதிய தொழிற்சாலை ஒரு உடன்படிக்கையின் கீழ் அமைக்கப்படும் என்று சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹேன தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீனாவின் சினோவாக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையில் செய்துகொள்ளப்படவுள்ளது.
இதன்படி அம்பாந்தோட்டையில் உள்ள பிரத்தியேக மருந்து உற்பத்தி மண்டலத்தில் அமைக்கப்படும் என்றும் இலங்கை தூதர் மேலும் கூறியுள்ளார்.