எரிபொருள் விலை தொடர்பில் சினோபெக் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக சினோபெக் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (30-04-2024) நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறான நிலையில், சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் புதிய விலை விபரங்களைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 92 ரக ஒக்ரைன் பெற்றோலின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
95 ரக ஒக்ரைன் பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
ஓட்டோ டீசல் 27 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 333 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 377 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.