மின்சாரம் பாய்ச்சி யானைகள் இரண்டைக் கொன்ற காணி உரிமையாளர் கைது
அனுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தின் இலக்கம் 90, பிலினிகம கிராம அலுவலர் பிரிவிலுள்ள அழுத்கம கிராமத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
இது தொடர்பாக வனவிலங்கு பிரதேச உதவி அதிகாரிக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இரண்டு யானைகளும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை
உயிரிழந்த யானைகளுக்கான பிரேத பரிசோதனையை இன்று (27) நண்பகல் பண்டுலகம வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரி மதுவந்தி மேற்கொண்டார்.
இந்நிலையில், யானைகளுக்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட காணியின் உரிமையாளரை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை (28) மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.