சினோபெக் எரிபொருள் விலையில் அதிரடி திருத்தம்! வெளியான புதிய விலை
இலங்கையில் இன்றைய தினம் (01-09-2023) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள சீனாவின் சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இவ் விடயம் சினோபெக் நிறுவனம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒட்டோ டீசல் இன்று முதல் 348 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 417 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இருப்பினும், ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.