உலகின் ஆகப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு கிடைத்த இடம்!
கொரோனா நோய்ப்பரவல் சூழலில் இவ்வாண்டின் உலகின் ஆகப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை டென்மார்க்கின் (Denmark) தலைநகர் கோப்பன்ஹேகன் (Copenhagen) மூன்றாவது நிலையை சிங்கப்பூரும் பிடித்திருக்கிறது.
மின்னிலக்கம், சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய அம்சங்களின் பாதுகாப்பில் சிங்கப்பூர் இரண்டாவது நிலையில் வந்தது. அதில் டென்மார்க் (Denmark) தலைநகர் கோப்பன்ஹேகன் (Copenhagen) முதல் நிலையைப் பிடித்தது.
அத்துடன் கனடாவின் டொரோன்ட்டோ (Toronto), அவுஸ்திரேலியாவின் சிட்னி, ஜப்பானின் தோக்கியோ உள்ளிட்ட நகரங்களும் பட்டியலில் முதல் 5 இடங்களில் வந்தன. 60 நகரங்களை, 76 பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் அந்தப் பட்டியல் வகைப்படுத்துகிறது.
இந்த நிலையில் இவ்வாண்டுப் பட்டியலில், நோய்ப்பரவலுக்கு எதிரான தயார்நிலை, COVID-19 நோயால் மடிவோர் விகிதம் போன்ற அம்சங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.