இலங்கைக்கு பயணம் செய்யும் நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தல்!
அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் போராட்டப் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு செல்வதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அதன் பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் நிலைமை குறித்தும் கவலைகளை எழுப்பியதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரியுள்ளது.
இலங்கையில் வசிக்கும் அவுஸ்திரேலியர்கள் அடிப்படைத் தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.