பொங்கலன்று உருவாகும் சுக்ராதித்ய யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜனவரி 14 ஆம் திகதி, சுக்கிரனும் சூரியனும் மகர ராசியில் இணைந்து மங்களகரமான சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அவர்களின் கர்ம ஸ்தானத்தில் உருவாகிறது, எனவே இது அவர்களின் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான விஷயங்கள் சிறந்த திசையில் நகரத் தொடங்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது அங்கீகாரம் கிடைக்கக்கூடும்.சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அபரிமிதமான வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் வழங்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை எதிர்பாராத அளவிற்கு வலுப்பெறும். கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரத்தைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, சுக்ராதித்ய யோகம் செல்வ ஸ்தானத்தில் உருவாகிறது. இதனால் அவர்களின் நிதிநிலை மேம்படும். அவர்களின் கடந்த கால முதலீடுகள் இப்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும். பணியிடத்தில் அவர்களின் திறமையை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும், இது அவர்களுக்கு நற்பெயரைப் பெற்றுத்தரும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம், நிதி நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இந்த காலகட்டம் உங்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான திருப்புமுனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
