தமிழர் பகுதியில் ஆட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் பலி ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்
குச்சவெளி மற்றும் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுகளில் மின்சாரம் தாக்கியதில் 16 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தங்கள் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி பொலிஸ் பிரிவின் பள்ளிமுனைப் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்சாரம்
அருகில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கிய தனது ஆட்டை மீட்கச் சென்றபோதே, அச்சிறுவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவின் தலாகொலவெவ பிரதேசத்தில் 75 வயதுடைய நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக, உயிரிழந்த முதியவர் அமைத்திருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.