முகம் பளபளவென ஆகவேண்டுமா? இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்கள்
தயிர் அல்லது தாஹி என்பது எளிமையான உணவுகளில் ஒன்று. தயிரை எப்படி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
இயற்கையாகவே புளிக்கவைக்கப்பட்ட உணவு பல ஆரோக்கிய அழகு நன்மைகளை அளிக்கும் அந்த வகையில் தயிர் மிக சிறந்தது.
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களை பயன்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தயிர் சருமத்துக்கு எப்படி நன்மை செய்யும்?
தயிரில் இருக்கும் லாக்டிக் அமில உள்ளடக்கம் காரணமாக தயிர் சாத்தியமான தோல் பராமரிப்பு நன்மைகளை அளிப்பதாக கூறுகின்றனர்.
மயோகிளினிக்கின் படி லாக்டிக் அமிலம் என்பது ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் ஆகும். இது முகப்பரு தயாரிப்புகளில் அதிகம் பார்க்கலாம்.
இந்த லாக்டிக் அமிலம் மற்றும் பிற AHA க்கள் உரித்தல், வீக்கத்தை குறைத்தல் மற்றும் மென்மையான புதிய தோலின் வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவுகின்றன.
தயிர் சருமத்தில் இருக்கும் பெரிய துளைகளை தடுக்கவும் வடுக்களை போக்கவும் நேர்த்தியான கோடுகள் குறைக்கவும் உதவுகிறது.
அத்தோடு சூரியனிடமிருந்து சருமம் எதிர்கொள்ளும் சேதத்தை குறைக்கவும் ஹைப்பர் பிக்மெண்டேஷன் குறைக்கவும் உதவுகிறது.
சருமத்துக்கு தயிர் எப்படி பயன்படுத்துவது?
தயிர் இயற்கையான அழகுப் பராமரிப்பில் முக்கியமானது. இது ஃபேஸ் மாஸ்க் ஆக செயல்படுகிறது.
தயிர் குணப்படுத்தும் மற்றும் மீட்டெடுக்கும் பண்புகளை கொண்ட பிற இயற்கை பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தும் போது பலன் சிறப்பாக கிடைக்கும். அப்படி நீங்கள் தயிரை எப்படி எதனுடன் கலந்து பயன்படுத்தலாம் என்பதை சுருக்கமாக பார்க்கலாம். தயிர் பசுந்தயிராக கெட்டியாக இருக்கட்டும்.
தயிர் மற்றும் வெள்ளரி
வெள்ளரியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கூழ் போல் மசித்து அதனுடன் தயிர் சம அளவு கலந்து பயன்படுத்தலாம். வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தவும் இது அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது.
தயிர் மற்றும் தக்காளி
தக்காளியை கூழ் போல் மசித்து சம அளவு தயிர் கலந்து சருமத்துக்கு பயன்படுத்தலாம். வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தவும். இது அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது.
தயிர் மற்றும் மஞ்சள்
தயிருடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து நன்றாக குழைத்து முகத்தில் தடவவும். வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தவும். இது அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது என்றாலும் ஆண்கள் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தகூடாது.
தயிர் மற்றும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து அதனுடன் தயிர் கலந்து நன்றாக குழைத்து வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தவும். இதுவும் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது.
தயிர் மற்றும் தேன்
தேன் உடன் தயிர் கலந்து முகத்துக்கு பயன்படுத்தலாம். வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தலாம். இது வறண்ட சருமத்தை சரி செய்ய கூடும். சாதாரண சருமம் கொண்டவர்களும் இதை பயன்படுத்தலாம்.