இவர்களை அடித்து துரத்த வேண்டும் ; மின்சார சபை ஊழியர்களால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்
மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (18) இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயத்துக்கு முன்பாக கொட்டும் மழையிலும் வீதியை மறித்து நூற்றுக்கணக்கான மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் பொதுமக்களும் சாரதிகளும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நீண்ட நேரமாக வீதியில் காத்துக்கிடக்கும் சாரதிகள் தங்கள் கருத்துக்களை கோபமாக வெளியிட்டுள்ளனர்.
இவர்களை வெளியேற்றுங்கள்...
இதன்போது சாரதி ஒருவர் மின்சார சபை ஊழியர்களுக்கு சிறந்த கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்கப்படுகின்றது இவர்கள் இவ்வாறு செற்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. புதிய அரசாங்கத்திற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இவ்வாறு போராட்டம் செய்பவர்களை பொலிஸாரை பயன்படுத்தி கட்டுப்படுத்தவேண்டும். பொலிஸார் எதற்காக உள்ளனர்? இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களே அவர்களை விரட்டியடிக்க நேரிடும்..
அன்றாட வேலைகளுக்கு செல்லும் பலர் தற்போது இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து இவர்களுக்கான ஒரு முடிவை வழங்குங்கள். இல்லை என்றால் இவர்களை வெளியேற்றுங்கள் மின்சார சபை ஊழியர்கள் மாத்திரம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரல்ல ” என கூறியுள்ளார்.