வரதட்சணை கொடுமை ; மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்
வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை மாமியார் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு கன்னியாகுமரி , திருவட்டார் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் டெம்போ டிரைவர் இவரது மனைவி மஞ்சு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
கல்லால் தாக்கி கதை கடிப்பு
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வரதட்சணை கேட்டு மாமியார், மஞ்சுவிடம் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
நேற்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவனை மஞ்சு தட்டிகேட்டதாகவும். அப்போது,மாமியார் அல்போன்சா மருமகளிடம் தகராறில் ஈடுபட்டுளார். அதுமட்டுமல்லாது மருமகளை கல்லால் தலையில் கொடூரமாக தாக்கி காதை கடித்து துண்டாக்கி உள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பத்மநாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற மஞ்சு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பில் மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.