சுட்டுக்கொல்லப்பட்ட நீலக சந்தருவன் ; பொதுமக்கள் கொண்டாட்டம்
ஹொரணை, கந்தானை பிரதேசத்தில் , தனது குழந்தையை கடத்திச் சென்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில் பிரதேசவாசிகள் அதனை பட்டாசு கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.
பொலிசாரால் தேடப்பட்டு வந்த நீலக சந்தருவன் எனும் பாதாள உலகக்குழு உறுப்பினர் நேற்று ஹொரணை, பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அங்குருவதொட்ட, பலபிட்டிய, பிடிகொல சந்தி பகுதியில் இரண்டு மாடி வீட்டில் குழந்தை உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் , விசேட அதிரடிப்படையினர் வீட்டைச் சுற்றி வளைத்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நீலக கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அங்கு சந்தேகநபரின் ஏழு வயது குழந்தை அங்கு இருக்கவில்லை.
பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு நண்பரிடம் கூறிவிட்டு நீலக நேற்று தலைமறைவாகியது தெரியவந்தது. அதன்பின்னர் குழந்தை ஹொரண பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேவேளை போதைப்பொருளுக்கு அடிமையாகிய நீலக மீது கொலை, பாலியல் வல்லுறவு, சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அதேவேளை நீலக கடந்த 11ஆம் திகதி தனது மனைவியின் கை, கால்களை வெட்டியதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்படுத்திய நிலையில் மனைவி தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சில வருடங்களுக்கு முன்னர் ஹொரணை, கிரிகலஹேன பிரதேசத்தில் சித்திரவதை கூடம் ஒன்றை நடத்தி பலரை கடத்திச் சென்ற சித்திரவதை செய்து பொதுமக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீலக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ருந்தார்.
இதனையடுத்து அவர் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியில், அவரது மனைவிக்கு முச்சக்கர வண்டி சாரதியொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதும், இந்த உறவு குறித்து, தம்பதியரிடையே மோதல் ஏற்பட்டது.
நீலகவின் மனைவியின் கள்ளக்காதலனும், புளத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அச்சம்பவத்தின் பின்னரே, கடந்த வாரம் மனைவியின் கை, கால்களை வெட்டியதாகவும் கூறப்படுகின்றது.
. இதேவேளை நீலக்கான் படுகொலையை அடுத்து நேற்று ஹொரணை பிரதேசத்தில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
மகனை கடத்திச் சென்ற தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி