யாழ் போதனா வைத்தியசாலையில் பற்றாக்குறைகள்; நோயாளிகள் அவதி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள் , இடமாற்றல் என வெளியேறியமையால் , வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
நோயாளிகள் கோரிக்கை
இதன் காரணமாக , நோயாளர்கள் , எக்ஸ்ரே , அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் , எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின்றனர்.
எனவே யாழ் . போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்திய பற்றாக்குறையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.