கொழும்பில் இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
கொழும்பு அத்துருகிரிய, வளேகடே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (08) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.