ஓய்வூதிய திணைக்களத்திற்கு முன்பாக இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு
மாளிகாவத்தை செவன மாவத்தையில் இன்று (01) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே ஓய்வூதிய திணைக்களத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
தெமட்டகொட மிஹிந்து சென்புர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய தினேஷ் பிரதீப் என்ற வர்த்தக நிறுவன உரிமையாளரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நேற்று (1) காலை மோட்டார் சைக்கிள் சேவை நிலையமொன்றை ஆரம்பித்து மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்து கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபர்களால் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பிரதேசத்தில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டில் தலைமறைவாகியுள்ள நெவிலின் நெருங்கிய சகாக்கள் இருவரும் சகோதரர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.