எல்பிட்டிய பகுதியில் பகீர் சம்பவம்... ஒருவர் உயிரிழப்பு... பெண் உட்பட 3 பேர் வைத்தியசாலையில்!
எல்பிட்டிய, பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) மாலை பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பகுதியிலுள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சந்தேகநபர்கள் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒரு பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் கலிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.