களுத்துறை சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு
களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே இருந்து பொதிகளை உள்ளே வீச முயன்ற நபர் ஒருவரை எச்சரிக்கும் வகையில், இன்று (21) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சிறைச்சாலையின் பாதுகாப்புக் கோபுரங்களில் பணியிலிருந்த அதிகாரிகள், குறித்த நபரை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசிய பொதிகள்
எனினும், அவர் பொதிகளைச் சிறைச்சாலைக்குள் வீசியதைத் தொடர்ந்து அதிகாரிகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் வீசிய பொதிகளில் இரண்டு சிறைச்சாலை வளாகத்திற்குள் விழுந்துள்ளன. அவற்றில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா இருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.