2 குழந்தைகளின் தாயினால் காதலனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; இறுதியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் 2 குழந்தைகளின் தாயொருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அமித் என்ற ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்கிடையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் குறித்த அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் ஆணின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வலியில் துடித்த அமித், ஆத்திரத்தில் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் ஓட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் தலைமறைவாக இருந்த அமித்தை அதிரடியாக கைது செய்தனர்.