நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து 88,000 கிலோகிராம் மரக்கறிகள்
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்று (13) 88,000 கிலோகிராம் மரக்கறிகள் கொண்டு செல்லப்பட்டதாக அந்த மத்திய நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 1Kg கோவா 210 ரூபாவிற்கும், 1Kg கரட் 230 ரூபாவிற்கும், 1Kg லீக்ஸ் 230 ரூபாவிற்கும், 1Kg பீட்ரூட் 260 மற்றும் 310 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மரக்கறிகள் கொள்வனவு
அத்துடன் 1Kg உருளைக்கிழங்கு 290 ரூபாவிற்கும், 1Kg சிவப்பு உருளைக்கிழங்கு 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த மரக்கறித் தொகுதிகள் காலி, மாத்தறை, பிட்டிகல, களுத்துறை, அம்பாறை, காத்தான்குடி ஆகிய பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.
மொத்த வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையிலேயே விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தற்போது சந்தையில் மரக்கறிகளுக்கான கேள்வி குறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.