இரவு ரயிலில் அரங்கேறிய சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (23) இரவு மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சர்ச்கேட்- நல்லசோபரா இடையே பாஸ்ட் லோக்கல் ரயில் சென்று கொண்டிருந்தது.
இதில் மயங்க் லோஹர் உள்ளிட்ட பயணிகள் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயில் கோர்கயான்- கண்டிவாளி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் கதவு திறந்திருந்தது. அருகில் ஒரு பயணி நின்று கொண்டிருந்தார்.

எந்த பயணியும் அவரை தடுக்க முயற்சிக்கவில்லை...
கதவு திறந்து இருந்ததால் மழைத்துளிகள் ரயிலுக்குள் விழுந்தன. இதனால் சக பயணிகள் கதவு அருகில் நின்ற ஒரு பயணியிடம், கதவை மூடுங்கள் எனக் கேட்டுள்ளனர். ஆனால், அந்த நபர் கதவை மூட மறுத்துவிட்டனர்.
அப்போது பயணிகளுக்கும் அந்த நபருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அந்த நபரை தாக்கியதனால் கோபம் அடைந்த அந்த நபர், தனது பேக்கில் இருந்த கத்தியை எடுத்து மயங்க் லோகர் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்க் லோகர் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியை எடுத்து தாக்கும்போது எந்த பயணியும் அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை என கூறப்படுகின்றது. இந் நிலையில் , கத்தியால் குத்திய நபரை 7 தனிப்படை அமைத்து பொலிஸார் தேடிவருகின்றனர்.