விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ; ஜனநாயகன் வெளியீட்டு திகதி ஒத்திவைப்பு
ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவிருந்த விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9ஆம் திகதி திரையிடப்படவிருந்த இந்த திரைப்படம், கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழல்கள் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு தமக்கும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள தயாரிப்புத் தரப்பு, ரசிகர்கள் காட்டி வரும் அதீத ஆர்வத்தையும் உணர்வுகளையும் மதிப்பதாகவும், தொடர்ந்து பொறுமையுடன் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பானது படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், புதிய திகதி அறிவிக்கப்படும் வரை காத்திருக்குமாறு படக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.