இலங்கையில் 2ம் வகுப்பு மாணவிக்கு அதிபர் செய்த மோசமான செயலால் அதிர்ச்சி
ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அதன்படி, தாக்குதல் நடத்திய அதிபர் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.
பலமுறை தாக்குதல்
இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியாவார்.
இந்தச் சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமி, முந்தைய நாள் பாடசாலைக்கு செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த மரக் குச்சியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி அவரது பெற்றோர், ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
