பொலிஸாரால் இரவில் சுற்றிவளைக்கப்பட்ட சொகுசு காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி சென்றவர் கைது செய்துள்ளனர்.
கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸாகேவத்த சந்திக்கு அருகில் நேற்று (08) இரவு பொலிஸாரினால் விசேட வாகன சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருள்
இதன்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்டதில், அதிலிருந்து 510 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், காரில் வந்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பமுணுவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பயணித்த காரையும் பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.