புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் ஒருவரின் சந்தேகத்தை தீர்த்த ஷிவானி!
இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர் தான் சிவானி.
ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு சிவானி நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
தற்போது உலக நாயகன் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் ஷிவானி நடிப்பது குறித்து கேட்ட ரசிகர்கருக்கு புகைப்படத்தின் மூலம் ஷிவானி உறுதி செய்து உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் முதல் வாய்ப்பு கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார் என்று தகவல்ம் வெளியானது.
ஆனால், ரசிகர்கள் பலரால் இதை நம்ப முடியவில்லை.
இப்படி பலரால் நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் நீங்கள் விக்ரம் படத்தில் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, விக்ரம் செட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரவன் புகைப்படத்தை பதிவிட்டு தான் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஷிவானி.