அனுர அரசாங்கத்தின் அதிரடி; மஹிந்த ராஜபக்சவின் மனைவி கைது
கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடையில் உள்ள வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்றிருந்தனர். இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி முறைகேடுகள்
சிரிலிய சவிய கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க, கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டிருந்தார்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.