போர்ச் சூழலுக்கு மத்தியில் தங்க விலை திடீர் வீழ்ச்சி ; நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (19) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,843 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டொலர் வலுவடைந்து வருவது மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய போர்ச் சூழலும் பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
எனினும், சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி காரணமாக, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.