நாட்டை வந்தடையுள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கப்பல்
3,900 மெற்றிக் தொன் எரிவாயுடன் 'கொரண்டைன்' (Quarantine) என்ற கப்பல் இன்று (01) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ள 'குட்வில்' (Goodwill) கப்பலில் இருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டின் அன்றாட எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் எந்தவித சிக்கலும் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதத்திற்காக 44,000 மெற்றிக் தொன் லிட்ரோ எரிவாயு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் 30 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.