இலங்கையர்களை அழைத்து சென்ற கப்பலின் கேட்பன் தொடர்பில் வெளியான தகவல்!
மியான்மரிலிருந்து 300க்கும் அதிகமான இலங்கையர்கள் கனடாவை நோக்கி புறப்பட்ட லேடி ஆர்3 எனும் மியான்மர் மீன்பிடி கப்பல் பிலிப்பைன்ஸ் - வியாட்நாம் கடல்பகுதி இடையே விபத்துக்குள்ளான போது, கப்பலின் கேப்டன் மாயமாகி விட்டதாக வியட்நாமிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
பின்னர், கப்பலில் இருந்த இலங்கையர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிங்கப்பூரில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஹெலியோஸ் லீடர் எனும் ஜப்பானிய கப்பலை தொடர்பு கொண்டிருக்கிறது.
அந்த கப்பலின் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டு தெற்கு வியாட்நாமில் உள்ள வங் டயூ துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக இவர்கள் இலங்கையை விட்டு வெளியேறிதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
இவர்கள் முன்னதாக கடவுச்சீட்டு மூலம் விமானம் வழியாக மியான்மருக்கு பயணித்திருக்கின்றனர்.
303 இலங்கையர்களையும் ஜப்பானிய கப்பல் மீட்பதற்கு முன்னதாக 40 மணி நேரம் அவர்கள் தத்தளித்து வந்ததாக வியாட்நாமிய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மீட்கப்பட்ட இலங்கையர்களை வியாட்நாமின் Ba Ria – Vung Ta மாகாண அதிகாரிகள் மூன்று கட்டிடங்களில் தங்க வைத்து உணவு வழங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 20 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் குறித்த ஆராய்வை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மேற்கொண்டுள்ள நிலையில், தஞ்சமடைந்த இலங்கையர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தரப்பு மேற்கொண்டு வருகிறது.