தருணிகாவிற்கு விசா மறுப்பு; நடேஸ்- பிரியா தம்பதிகளிற்கு தொடரும் அவலம்!
அவுஸ்திரேலியா புகலிட கோரிக்கையாளர்களான இலங்கை தமிழ் குடும்பத்திற்கு உள்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் பிரிட்ஜிங் விசாவை வழங்கியுள்ளபோதும், நடேஸ் குடும்பத்தின் இளைய மகளிற்கு விசா வழங்கப்படாததால் அவர்கள் தொடர்ந்தும் பேர்த்தில் உள்ள சமூகதடுப்பில் வாழும் நிலை நீடிக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நீதிமன்றமொன்றிற்கு உறுதியளித்திருந்தபடி பிரியா நடேஸ் கோபிகாவிற்கு அமைச்சர் பிரிட்ஜிங் விசாவை வழங்கியுள்ளார். இவ்வாறான தருணிகாவிற்கு அமைச்சர் விசா வழங்காதது குறித்து தமிழ் குடும்பத்தின் ஆர்வலர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குடும்பத்தின் ஒரு உறுப்பினருக்கு மாத்திரம் அமைச்சர் விசா வழங்க மறுத்தமை குறித்து அவர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த துயரமான வரலாற்றை ஒரு பேனா மூலம் முடிவிற்கு கொண்டுவரும் அதிகாரத்தை அமைச்சருக்கு அவுஸ்;திரேலிய சட்டம் வழங்கியுள்ள போதிலும் அவர் அதனை செய்யவில்லை என பிரியா நடேஸ் தம்பதிகள் கவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறபொபடுகின்றது.