குருபகவான்-செவ்வாய் உருவாகும் அரிய ஷடாஷ்டக யோகம் ; கோடீஸ்வரராக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
செவ்வாய் மற்றும் குருபகவான் 150 டிகிரி இடைவெளியில் இணையும்போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த யோகம் பிப்ரவரி 13 அன்று உருவாகப்போகிறது.

இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள்.
இந்த யோகத்தால் அவர்களின் தொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்திற்கான வழிகள் திறக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
ஷடாஷ்டக யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான மாற்றங்களைக் கொடுக்கப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மற்றும் சவாலான பணிகள் இந்த யோகத்தால் வெற்றிகரமாக முடிக்கப்படும். இது அவர்களுக்கு வெற்றிகரமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையைத் தரப்போகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலை இந்த யோகத்தால் வலுவடையப்போகிறது. நிலுவையில் உள்ள திட்டங்கள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். இந்த யோகத்தால் அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள், மேலும் அவர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இதன் காரணமாக, அவர்கள் வாழ்க்கையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த யோகத்தால், சிம்ம ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்

விருச்சிகம்
ஷடாஷ்டக யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த யோகத்தால் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. இந்த சக்திவாய்ந்த யோகம் வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நற்பலன்களை அளிக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள், மேலும் அவர்களின் ஆற்றல் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும். அவர்களின் வருமானம் பல்வேறு வழிகளில் அதிகரிக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் உள்ள நிதி சிக்கல்களை தீர்க்க முடியும்.
