உணவு வாங்கச் சென்ற 13 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டல் – ஓட்டல் உரிமையாளர் கைது
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில், உணவு வாங்குவதற்காக ஓட்டலுக்குச் சென்ற 13 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ரமேஷ்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இவர் கீரிப்பாறை பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று குறித்த ஓட்டலுக்கு 13 வயது சிறுவன் உணவு வாங்கச் சென்றுள்ளார்.

இதன்போது ஓட்டலில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிறுவனை வலுக்கட்டாயமாக மறைவான இடமொன்றுக்கு அழைத்துச் சென்று ஓட்டல் உரிமையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுவன் சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பியதை அவதானித்த பெற்றோர், அவரிடம் விசாரித்துள்ளனர்.
இதன்போது, ஓட்டல் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகச் சிறுவன் தெரிவித்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பவம் தொடர்பில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஓட்டல் உரிமையாளர் ரமேஷ்குமாரைக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.