வேலைக்கு சென்ற யுவதியிடம் பாலியல் அத்துமீறல்; பிரதேச சபை உறுப்பினருக்கு நேர்ந்த கதி
இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹாவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை, விளக்கம்றியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நவம்பர் 5-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபருக்கு சொந்தமான பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம்
சந்தேக நபருக்கு சொந்தமான பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த 20 வயதுடைய பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கிடைத்த புகாரின் பேரில், பொத்துஹெர காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபர் பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் உதும்பரா தசநாயக்க, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்தச் சந்தேக நபர், 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொல்கஹாவெல பிரதேச சபையின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
சம்பவம் தொடர்பில் பொத்துஹெர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.