தலங்கம இரட்டை கொலை பேருந்து சிக்கியது
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2026 பெப்ரவரி 13ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைப் படுகொலை தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பேருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி இந்தப் பேருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த பேருந்தை 14 நாட்களுக்கு முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.