பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக ஐந்து காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரே இவ்வாறு குறித்த பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள இடம் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளன.
குறித்த நபரை விரைவில் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.