தமிழர் பகுதி பெண் அதிகாரிக்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி!
கிளிநொச்சியில் பெண் கிராமசேவகரை கடும் தகாத வார்த்தைகளால் பெண்கள் சிலர் ஏசும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கிராமசேவகரை கடும் வார்த்தைகளால் சாடும் குறித்த பெண் குற்றசெயல்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என கூறப்படுகின்றது.
சமூக ஆர்வலர்கள் விசனம்
இந்நிலையில் பெண் கிராமசேவகரிடம் நற்சான்று பத்திரம் பெறுவதற்கு பெண்ணின் உறவினர் முயன்றதாக கூறப்படுகின்றது.
அது தொடர்பிலேயே கிராம சேவகரின் அலுவலகம் வந்த குறித்த பெண், தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்துள்ளார். அதோடு அவர்களுடன் வந்த ஆண் ஒருவரும் கிராமசேவகரை மிரட்டி கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
அலவலகத்தில் பலர் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு காத்திருந்தவேளை பெண் அதிகாரி என்றும் பாராது , பலர் முன்னிலையில் தகாத வார்த்தை பிரயோகித்த பெண் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.