மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் ; சுற்றிவளைத்த பொலிஸார்
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என இயங்கிவந்த விபச்சார விடுதியை சோதனை செய்த போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விபச்சார விடுதியை நிர்வகித்த ஒருவரும் அதற்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 45 வயதுடைய வெலிப்பனை மற்றும் நாவலஹேன பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.