ஆசைக்கு இணங்காத காதலிமீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய காதலன்!
ஆசைக்கு இணங்காத காதலி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய காதலனை ஆந்திர பொலிஸார் தேடிவருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் தீவிர காதலில் இருந்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த அனுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார்.
போதைக்கு அடிமையான அனுதீப்
போதைக்கு அடிமையான அனுதீப் தினமும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது. அன்று காலையிலும் போதையில் இருந்த அனுதீப் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தி இருக்கிறார்.
அவர் சம்மதிக்கவில்லை.எனவே கோபமடைந்த அணுதீப் கொதிக்கும் எண்ணெயை மாணவியின் கால்களில் ஊற்றி அவரை சித்திரவதை செய்தார்.
இந்நிலையில் அங்கிருந்து தப்பித்த மாணவி பலத்த காயத்துடன் வீட்டுக்கு வந்து அனுதீப் தன்னை காதலித்ததாகவும், கல்லூரியில் இருந்து அழைத்து வந்து 15 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாக தெரிவித்தார்.
காதலனுக்கு வலைவீச்சு
அதற்கு தான் மறுத்த காரணத்தால் கொதிக்கும் எண்ணெயை கால்களில் ஊற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்தார். படுகாயம் அடைந்த மாணவியை தற்போது ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றிய பெற்றோர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாகி இருக்கும் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.