செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள்
கிரகங்களின் தளபதியான செவ்வாய் மேஷ ராசியை ஆட்சி செய்கிறார், நவம்பர் மாதத்தில் செவ்வாய் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான காலகட்டத்தை கொண்டுவரப்போகிறது.

செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
செவ்வாயின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையைப் பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்கலாம். அவர்களின் பேச்சில் பணிவிருக்காது. மற்றவர்களுடன் பேசும்போது பல வாக்குவாதங்கள் ஏற்படலாம், எனவே வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ர பெயர்ச்சி மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் நிதிரீதியான இழப்புகளை சந்திக்க நேரிடும், மேலும் நன்றாக சிந்தித்து பெரியவர்களுடன் ஆலோசித்தப் பிறகே எந்தவொரு முதலீட்டையும் செய்ய வேண்டும். வேலையில் சில தடைகள் ஏற்படலாம், எனவே உங்கள் வேலையில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே பின்னடைவுகளை சந்திப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் தொடர்பு திறன்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
