வீட்டில் ஏற்படும் தேவையற்ற செலவை குறைக்கணுமா? ; வாஸ்து சாஸ்திரத்தில் சில எளிய வழிகள்
நாம் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பதே செலவு செய்யத் தான். அதுவும் அத்தியாவசிய செலவுகளுக்கு பணத்தை செலவு செய்தால் பரவாயில்லை. ஆனால் சில சமயங்களில் தேவையற்ற செலவுகள் நாம் எதிர்பார்க்காத அளவில் வந்துவிடும்.

இந்நிலையில் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்க வாஸ்து சாஸ்திரத்தில் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது வீட்டில் ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் சில வாஸ்து குறிப்புகளைக் காண்போம்.

பிரதான வாசல் பரிகாரம்
ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் வீட்டின் பிரதான வாசல் வழியாகத் தான் நுழைகிறது. ஆனால் எப்போது வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக எழுகிறதோ, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் வீட்டின் வாசலுக்கு அருகில் துளசி செடியையும், மற்றொரு பக்கத்தில் வாழை செடியையும் வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீங்கி, வீட்டில் தேவையற்ற செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும்.

செப்பு நாணயங்கள்
வீட்டிற்கு பணம் வந்த வேகத்திலேயே செலவாகிவிடுகிறதா? அப்படியானால் செப்பு நாணயங்களை வீட்டின் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். அதுவும் மகாசிவராத்திரி போன்ற சுப நாட்களில், 3 செப்பு நாணயங்களை எடுத்து, ஒரு சிவப்பு துணியில் கட்டி, பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இப்படி வைக்கும் போது, தேவையற்ற செலவுகள் குறையும்.

படிக சிவலிங்கம்
ஒரு வீட்டில் பூஜை அறை மிகவும் முக்கியமான பகுதியாகும். சொல்லப்போனால் பூஜை அறை முழு வீட்டின் ஆற்றலையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட பூஜை அறையில் ஒரு படிக சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்யுங்கள். இப்படி சிவலிங்கத்தை பூஜை அறையில் வைத்தால், எப்போதும் பூஜை அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும். முக்கியமாக உடைந்த அல்லது பழைய பொருட்களை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரித்துவிடும்.
